அமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்

அமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்
அமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்
Published on

புலம்பெயர்வோர் தொடர்பான அமெரிக்க அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்யும் வகையில் பிரபல டைம் இதழ் அட்டைப்படம்   ஒன்றை வெளியிட்டுள்ளது. 

முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளிடம் இருந்து அமெரிக்க அரசு குழந்தைகளை பிரித்து வைத்தது. இதனை விமர்சிக்கும் விதமாக டைம்ஸ் இதழ் அட்டைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்பு குழந்தை ஒன்று அழுதபடி நின்று கொண்டிருக்கிறது, ட்ரம்ப் அந்தக் குழந்தையை காண்பது போலவும், அமெரிக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகமும் இடம் பெறும் வகையில் அட்டைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தை ஏதுமறியாமல் அழுது கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அட்டைப் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். எதிர்ப்புகளைத் தொடர்ந்து, குழந்தைகளைப் பிரிக்கும் உத்தரவை நேற்று தான் ட்ரம்ப் திரும்ப பெற்றார். ஆனால் அகதிகள் விவகாரத்தில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதில் மாற்றமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே, அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள குழந்தை அகதி தடுப்பு மையத்திற்கு மெலனியா ட்ரம்ப் அணிந்து சென்ற ஆடை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மெலனியா அணிந்திருந்த பச்சை நிற கோட்டின் பின்புறம் "உண்மையில் எனக்குக் கவலையில்லை, உங்களுக்கு" என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. இது தொடர்பான சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com