உக்ரைன் போர் முடிவடைந்து விடும், ஆனால்... - பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

உக்ரைன் போர் முடிவடைந்து விடும், ஆனால்... - பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை
உக்ரைன் போர் முடிவடைந்து விடும், ஆனால்... - பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை
Published on

உக்ரைன் போர் முடிவடைந்து விடும், ஆனால், அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும், விளைவுகளும் மிக நீண்டகாலம் நம்மை பாதிக்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே பதற்றம் தொடங்கியது முதலாக, உக்ரைனுக்கு ஆதரவாக கொடுத்து வரும் நாடுகளில் ஒன்று பிரான்ஸ். உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர்க்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் நேரில் பல முறை வலியுறுத்தி வந்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான். ஆனால், பெரும்பாலான நாடுகளின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல், முழுக்க முழுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எடுத்த மனிதாபிமானமற்ற, தன்னிச்சையான முடிவாகும். இந்த சமயத்தில், உக்ரைனுக்கு ஆதரவாகவும், அதன் மக்களுக்கு உறுதுணையாகவும் உலக நாடுகள் நிற்க வேண்டும். நான் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உக்ரைன் போர் ஒரு நாள் முடிவுக்கு வந்து விடும். உக்ரைன் - ரஷ்யா விவகாரத்துக்கும் ஒருகட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். ஆனால், இந்த போர் ஏற்படுத்தப்போகும் தாக்கமும், விளைவுகளும் நீண்டகாலம் இருக்கும். ஆதலால், உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இமானுவேல் மேக்ரான் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com