500 ஊழியர்களுக்கு 650 டாலர் கிறிஸ்துமஸ் போனஸ் வழங்குவதாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல், கணினி பாதுகாப்பு சோதனை என்று அறிவித்த அமெரிக்க இணையதள நிறுவனமான கோடாடி(GoDaddy), தனது ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் வழங்குவதாக வாக்குறுதியளித்த மின்னஞ்சல், கணினி பாதுகாப்பு சோதனை என்று அறிவித்தபிறகு அமெரிக்க இணையதள நிறுவனமான கோடாடி(GoDaddy), தனது ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
"கோடாடி நிறுவனம் தங்கள் தளத்தின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. சோதனை மெயில் என அறிந்ததால் சில ஊழியர்கள் வருத்தப்பட்டதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதற்காக நாங்கள் மன்னிப்பு கோரியுள்ளோம்" என்று உலகின் மிகப்பெரிய இணைய கள மேலாண்மை நிறுவனமான கோடாடியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
டிசம்பரில், ‘சுமார் 500 கோடாடி ஊழியர்களுக்கு 650 டாலர் கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கப்படும்‘ என்ற நிறுவனத்தின் மின்னஞ்சலைக் கிளிக் செய்து, அவர்களின் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு படிவத்தை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்களின் இன்பாக்ஸில் வேறு செய்தி தோன்றியது. எங்கள் சமீபத்திய ஃபிஷிங் சோதனையில் நீங்கள் தோல்வியுற்றதால் இந்த மின்னஞ்சலைப் பெறுகிறீர்கள், "என்று கோடாடியின் பாதுகாப்புத் தலைவரின் மின்னஞ்சல் தெரிவித்தது. இது ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியது