துபாயில் ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் பவுடர் விற்பனைக்கு வந்துள்ளது.
கேமலிசியஸ் என்று பெயரிடப்பட்டுள்ள பால்பவுடர் துபாயில் நடைபெற்று வரும் துபாய் உணவுக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு வயது முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த பவுடரை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பசும்பாலில் இருக்கும் விட்டமின் சி-யின் அளவை விட இந்தப் பால்பவுடரில் கூடுதல் விட்டமின் இருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளது. ஹாலந்து பால்பவுடர் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து கேமலிசியஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சந்தை படுத்த கேமலிசியஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒட்டகப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் பால்பவுடர் என்ற சிறப்பை கேமலிசியஸ் பெற்றுள்ளது.