பாம்பே என்பதற்கு ‘பாம்’என எழுதியதால் ஏர்போர்ட்டில் பீதி

பாம்பே என்பதற்கு ‘பாம்’என எழுதியதால் ஏர்போர்ட்டில் பீதி
பாம்பே என்பதற்கு ‘பாம்’என எழுதியதால் ஏர்போர்ட்டில் பீதி
Published on

ஆஸ்திரேலிய விமானநிலையத்தில் வந்து இறங்கிய பயணிகள் வழக்கம் போல் தங்களது லக்கேஜ்களை எடுத்துக்கொண்டிருந்தனர்.அப்போது அதில் வந்த ஒரு லக்கேஜ் பேக்கில் எழுதப்பட்டிருந்த வாசகம் அனைவரின் புருவத்தையும் உயரச்செய்துள்ளது. அப்படி அந்த பேக்கில் என்ன எழுதியிருந்தது என்கிறீர்களா? பாம் டூ பிரிஸ்பேன்  (Bomb to Brisbane) என எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் விமான நிலைய காவலர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து அங்கு விரைந்த காவலர்கள் அந்த பேக் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பேக் இந்தியாவை சேர்ந்த வெங்கட லக்ஷ்மி (வயது 65) என்பவருடையது என தெரியவந்தது.இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அந்தப்பெண்மணி மும்பையை சேர்ந்தவர் என்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளை காண்பதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இவர் துணை இல்லாமல் தனியாக சென்றதால் பயத்தின் காரணமாக தான் செல்ல வேண்டிய இடம் எங்கிருந்து செல்கிறேன் என்ற விவரத்தை அந்த பேக்கில் எழுதியுள்ளார். மும்பையை சேர்ந்தவர் என்பதால் பாம்பே - பிரிஸ்பென் என எழுதநினைத்துள்ளார். ஆனால் போதிய இடம் இல்லாததால் பாம்பேவிற்கு பதிலாக  ‘பாம்’ என எழுதிவிட்டார். இவர் அறியாமல் செய்த பிழையால் ஆஸ்திரேலியாவில் சிக்கிக்கொண்டார்.அவரின் விளக்கத்தை கேட்ட காவல்துறை பேக்கை செக் செய்துவிட்டு அவரை அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அவரது மகள் ஜோதிராஜ் கூறுகையில்,எனது தாய் இந்த பேக்கை மும்பை விமானநிலையத்தில் எடுத்துச்செல்லும் போதும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவித்ததாக கூறினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com