முதல் முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது சவுதி அரேபியா!

முதல் முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது சவுதி அரேபியா!
முதல் முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது சவுதி அரேபியா!
Published on

சவுதி அரேபியா, முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது.

விஷன் 2030 என்ற பெயரில் சவுதி அரேபியாவை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

 இதன் ஒரு பகுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பெண்களை நியமித்தது உள்ளிட்ட விஷயங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. 21 வயதைக் கடந்த பெண்கள், ஆண்கள் ஒப்புதல் இல்லாமல் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆண்கள் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் எனவும் சமீபத்தில் சவுதி அரசு அறிவித்தது. 

இந்நிலையில் முதன்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை அந்நாடு வழங்க முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவில் மெக்கா, மெதினா புனிதப் பயணம் வரும் யாத்ரீகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதீப் வெளியிட்ட அறிக்கையில், ‘’ சர்வதேச சுற்றுலாவுக் காக சவுதியை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளோம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வியப்படைவார்கள். பகிர்ந்துகொள்ள வேண்டிய பொக்கிஷங்களாக, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 5 பாரம்பரிய இடங்களும் வியக்கக் கூடிய இயற்கை அழகும் இருக்கின்றன.

(அகமது அல் காதீப்)

49 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் விசா வழங்கும் திட்டம், நாளை (சனிக்கிழமை) முதல் செயல் படுத்தப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. (இப்போது, வெளிநாட்டில் இருந்து வரும் பெண்கள், முழு உடலையும் மறைக்கும் உடைகளை அணிந்தே சவுதிக்குள் அனுமதிக்கப் படுவார்கள்). மது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் விதிமுறையின் கீழ் மது விற்ப னை செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com