தேவதாசி முறை ஒழிப்பு To பால்ய விவாக எதிர்ப்பு: முத்துலட்சுமி அம்மையார் செய்துசென்ற முத்தான செயல்கள்!

மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் நினைவுதினம் இன்று. இந்நாளில் நாம் அனைவரும் முத்துலட்சுமி அம்மையார் பற்றி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.
முத்துலட்சுமி அம்மையார்
முத்துலட்சுமி அம்மையார்சென்னை அடையாறு புற்றுநோய் மையம்
Published on

தேவதாசி முறை ஒழிப்புக்கு வித்திட்ட சமூக மருத்துவர்...

குழந்தை திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட போராளி...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் ஆணிவேர்...

அவர்தான்

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
முத்துலட்சுமி அம்மையார்
முத்துலட்சுமி அம்மையார்

1886ம் ஆண்டு ஜூலை 30ம் ஆண்டு பிறந்த முத்துலட்சுமி அம்மையார், தன் 82-வது வயதில் அதாவது 1968-ல் ஜூலை 21 இந்த உலகை விட்டு பிரிந்தார். அவரது நினைவுதினம் இன்று. இந்நாளில் நாம் அனைவரும் முத்துலட்சுமி அம்மையார் பற்றி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.

  • சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் இவர்

  • அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் பணியாற்றிய இந்தியாவின் முதல் பெண் பயிற்சி அறுவை சிகிச்சை நிபுணர் இவர்தான்.

முத்துலட்சுமி அம்மையார்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு கவுரவம் சேர்த்த கூகுள் நிறுவனம்
  • மெட்ரிக் படிப்பை, தனியாக வீட்டிலிருந்து படித்தபடி தேர்ச்சிபெற்றார். அதன்பின் கல்லூரி செல்வதற்கு தேவையான இன்டர்மீடியட்டை படித்தார்.

    அதற்காக புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானிடம் அனுமதியும், கல்வி உதவித்தொகையும் பெற்று, அங்குள்ள ஆண்கள் மட்டுமே பயின்றுவந்த பள்ளியில் முதல் மாணவியாக பயின்று இண்டர்மீடியட் முடித்தார் முத்துலட்சுமி அம்மையார்.

    ‘இவரைக் கண்டால் எங்கள் மகன்களின் மனம் சஞ்சலப்படும். பெண்ணுக்கு கல்வி எதற்கு? பெண் படித்தால் கேள்வி கேட்பாள். படிக்க அனுமதிக்கக்கூடாது’ என்ற கேட்டவர்களை புறந்தள்ளி, இவருக்கு கல்வியை கொடுத்தவர் மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான். கடும் இன்னல்களுக்கிடையே, திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டு கல்வி பயின்ற இவர், முதல் மதிப்பெண் பெற்று வரலாற்று தேர்ச்சியை பதிவுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அங்கு தேர்ச்சி பெற்ற பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவை தேர்ந்தெடுத்து படித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணராக தேர்ச்சிபெற்று 1912ல் மருத்துவரும் ஆனார்

  • ‘திருமணம் என்பது ஒரு ஆண் பெண்ணை தனக்கு கீழாக வைத்து நடத்த உதவும் சடங்கு. ஒரு பெண் திருமணம் செய்கிறாள் என்றால், அவள் ஒரு ஆண் தன்னை ஜெயிக்க விட்டுவிட்டாள் என்றுதான் பொருள்’ என்றே நினைத்திருந்த முத்துலட்சுமி அம்மையார், தன்னுடைய 28 வயதில் (1916-ல்) சாதி மறுப்பு திருமணம் செய்தார்.

முத்துலட்சுமி அம்மையார்
முத்துலட்சுமி அம்மையார்
  • அப்போதும், ‘என்னை சமமாக நடத்த வேண்டும், எனது விருப்பங்களில் தலையிடக்கூடாது’ என்ற நிபந்தனைகளின் பேரிலேயே திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார். அதுவும் எவ்வித சடங்குகளும் இல்லாமல், அன்னி பெசண்ட் அம்மையாரின் பிரம்மஞான சபையின் மூலமே நடந்தது. இவர் திருமணம் செய்துகொண்டது, சுந்தர ரெட்டி என்பவரை. இவர், லண்டனில் படித்து மருத்துவரானவர்.

  • மருத்துவம் மட்டும் போதாது என்று நினைத்த முத்துலட்சுமி அம்மையார், அன்னிபெசன்ட் அம்மையாரின் வழிகாட்டுதலின் கீழ் பெண்களுக்கான இயக்கங்களில் பங்கேற்றார்.

  • 1926-ல் பெண்களும் தேர்தலில் போட்டியிடலாம் எனச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் சட்டமேலவை உறுப்பினரானார். சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும் ஆனார். அதன்படி 1929-ல் பிரிட்டிஷால் அமைக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் இந்தியப் பெண் சட்டமேலவை உறுப்பினரானார் முத்துலட்சுமி அம்மையார்; துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முத்துலட்சுமி அம்மையார்
பெண்ணடிமைத்தனம் முடை நாற்றம் வீசியபோது புரட்சிக்கனலாய் வாழ்ந்தவர் முத்துலட்சுமி : ஸ்டாலின்
  • 1930-ல் கைவிடப்பட்ட, பாதுகாப்பற்ற பெண்களை காத்திட இவர் தொடங்கிய ஔவை இல்லம், இன்றும் செயல்பாட்டில் உள்ளது. மீட்கப்பட்ட தேவதாசிப் பெண்களை காப்பகத்தில் சேர்க்கச் சென்ற போது மறுக்கப்பட்டதால், அவர்களை தானே அரவணைக்கும் நோக்கத்தில் இந்த இல்லத்தை அவர் தொடங்கினார். காலத்தின் ஓட்டத்தில், தற்போது ஔவை இல்லம் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் செயல்படுகிறது என்பது கூடுதல் நம்பிக்கை.

  • புற்றுநோயால் தன் உறவுகளை தான் இழந்ததுபோல (இவரது தங்கை புற்றுநோயால் உயிரிழந்தவர்) யாரும் அவர்களின் உறவுகளை இழக்கக்கூடாதென நினைத்து, 1952-ல் சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிவைத்தார். அம்மருத்துவமனையின் ஆணிவேரே, முத்துலட்சுமி அம்மையார்தான்.

  • விதவை மறுமண ஆதரவு, பெண் கல்வி, பெண்ணுக்கு வாக்குரிமை மற்றும் சொத்துரிமை வேண்டும் உட்பட பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். பெண்களின் திருமண வயதை 14 ஆக உயர்த்தக் கோரும் மசோதா குறித்து சட்டமன்றக் கவுன்சிலில் விவாதம் நடந்தபோது, “உடன்கட்டை ஏறும் பழக்கத்தால் ஏற்படும் துயரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் பழக்கத்தால், பெண் குழந்தைகள் பிறப்பு முதல் மரணம் வரையில் தொடர்ந்து துயரமான வாழ்வுக்கு அடிமைப்பட்டுப் போகும் நிலை உள்ளது, குழந்தைப் பருவ மனைவி, குழந்தைப் பருவ தாய், பல சமயங்களில் குழந்தை பருவத்திலேயே விதவை என துயரங்கள் தொடர்கின்றன” என்று பேசினார்.

முத்துலட்சுமி அம்மையார்
”பால்ய விவாகம், தேவதாசி முறை ஒழிப்பு..” சமூகப் போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
  • சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர், சென்னை ராணி மேரி கல்லூரியின் முதல் பெண் முதல்வர் என சொல்லப்படுகிறது.

  • 1930-ல் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் கொண்டுவர மசோதா தாக்கல் செய்தார். அப்போது சட்டசபையிலிருந்த பலரும் அதை எதிர்த்துள்ளனர். அதற்கு முத்துலட்சுமி அம்மையார், மிகக்கடுமையாக பேசி, மசோதாவை வெற்றிகரமாக தாக்கல் செய்தார். இந்த மசோதாவே பின்னாளில் இந்திய விடுதலை பெற்ற வருடமான 1947-ல் சட்டமானது.

  • பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் ஆகியவை அமலுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் முத்துலட்சுமி அம்மையார்தான்.

முத்துலட்சுமி அம்மையார்
முத்துலட்சுமி அம்மையார்
  • 1956-ல் இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் வழங்கியது மத்திய அரசு.

  • 1954 – 57 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

  • இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டை ஒட்டி 1986ல் தமிழக அரசு தபால் தலை ஒன்றை வெளியிட்டது. தன்னுடைய 81வது வயதில், அதாவது 1968ல் அவர் காலமானார்.

முத்துலட்சுமி அம்மையார்
முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளான ஜூலை 30ல் ‘மருத்துவமனை தினம்’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com