புழல் சிறையில் கணவர் மரணம் - மனைவி சட்டப் போராட்டம்

புழல் சிறையில் கணவர் மரணம் - மனைவி சட்டப் போராட்டம்
புழல் சிறையில் கணவர் மரணம் - மனைவி சட்டப் போராட்டம்
Published on

சந்தேக மரண வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அவசர அவசரமாக கைதியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். புழல் சிறையில் உயிரிழந்த கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய நீதிமன்றத்தை நாடியுள்ளார் மனைவி.

சென்னை அருகே செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவரின் கணவர் சீனிவாசன், கொலை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வப்போது சிறைக்கு சென்று கணவரை பார்த்து நலம் விசாரித்து வந்த ஜான்சிராணிக்கு, அது தான் அவர்களது கடைசி சந்திப்பு என்பது தெரியாமல் போனது. அடுத்த வாரம் வெளியே வரவிருந்த சீனிவாசன், கடந்த 10ஆம் தேதி சிறைக்குள் திடீரென உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் ஜான்சிராணி, உடலை வாங்க மறுத்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அவசர அவசரமாக கைதி சீனிவாசனின் உடலை கூராய்வு செய்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார் வழக்கறிஞர் பார்த்தசாரதி.

மனுதாரரின் மருத்துவர் முன்னிலையில் கைதி சீனிவாசனின் உடலை மறுகூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, அதன்படி மறுகூராய்வு நடத்தப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடற் கூராய்வு அறிக்கைக்கு பிறகே கைதியின் உயிரிழப்பில் உள்ள சந்தேகம் நிவர்த்தியாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com