வீடியோ ஸ்டோரி
விண்வெளியில் எத்தனையோ கிரகங்கள் இருக்கும் போது எல்லா நாடுகளும் நிலவுக்குப் பின்னால் போவது ஏன்? #ISRO
இந்த விண்வெளியில் எத்தனையோ கிரகங்கள் இருக்கு. சூரியனும் இருக்கு. ஆனால், ஏன் எல்லா நாடுகளும் நிலவு பின்னாடி போறாங்க அதற்கான காரணம் என்ன வாங்க விரிவாக பார்க்கலாம்.
பூமியில் இருந்து நிலவு கிட்டத்தட்ட 3 லட்சத்தி 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஆனால், சூரியன் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. நிலவுக்கான தொலைவு மிகவும் குறைவு என்பது சாதகமாகப் பார்க்கப்படுகிறது. நம்மிடம் இருக்கும் தொழில் நுட்பத்தை சோதித்துப் பார்ப்பதற்கு நிலவு பயன்படுகிறது என்றே சொல்லலாம். உலகில் உள்ள நாடுகளில் எந்த நாடு நிலவில் சென்று கொடியை நாட்டுகிறதோ அந்த நாட்டிக்குப் மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.