சுண்டுவிரலில் மோதிரம் போட்டா சளி பிடிக்காதா?.. தங்க ஆபரணங்களும்.. நல்ல அதிர்வலைகளும்!
புதிய தலைமுறை நடத்தும் பொதுமக்களும் நிபுணர்களும் பங்கேற்கும் ’உரக்கச்சொல்லுங்கள்’ நிகழ்ச்சியில், ”தங்கம் அழகுப்பொருளா? முதலீட்டுப் பொருளா?” என்ற தலைப்பு முன்வைக்கப்பட்டது. இதில் தங்கத்தின் பலன் குறித்து பகிர்கிறார் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்.
”தங்கத்தை லத்தீன் மொழியில் ‘அயூரம்’ என்கின்றனர். இதற்கு தமிழில் ‘பிரகாசமான விடியல்’ என்று அர்த்தம். இப்போது ஆண்கள், பெண்கள் இருவருமே தங்கத்தை அழகுக்காக போடுகின்றனர்.கோவிலுக்கு செல்லும்போது பட்டாடை உடுத்திச் செல்கிறோம். தங்க நகைகளை அணிந்துசெல்கிறோம். அதற்கு காரணம் கருவறையிலிருக்கும் நல்ல அதிர்வலைகள் தங்கம் மூலமாக நமக்கு கிடைக்கிறது.
அதேபோல், காது குத்துவது, மோதிரம் போடுவது, மூக்கு குத்துவது போன்றவை எல்லாம் நமது உடலின் அக்குபஞ்சர் முனைகளை தூண்டுகிறது என்பது அறிவியல்பூர்வமாகவே நிரூபணமாகியிருக்கிறது.
உதாரணமாக சளி பிரச்னை இருப்பவர்கள் சுண்டுவிரலில் மோதிரம் போடவேண்டும் என்பார்கள். இதுமாதிரி உடலில் வெவ்வேறு பிரச்னை இருப்பவர்கள் அதற்கேற்றார்போல் ஆபரணங்களை அணிவது உடலுக்கு நல்லது. தங்கம் அழகுசாதன பொருளாக இருந்தாலும் அதன் தேவைகள் அதிகரித்துவருவதால் முதலீடாக்குகின்றனர்” என்கிறார் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்.