1999-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இந்தியாவின் கார்கில் பகுதிக்குள், பயங்கரவாதிகள் சிலர் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சற்றும் தளராத இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. கார்கிலில் நிகழ்த்தப்பட்ட போர் திட்டத்துக்கு 'ஆபரேஷன் விஜய்' என பெயரிடப்பட்டது.
இதனிடையே கார்கில், லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடும் போர் மூண்டது. மைனஸ் டிகிரி குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு போரிட்ட இந்திய ராணுவ வீரர்கள், சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரையும், பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று கார்கில் பகுதியில் வெற்றிக்கொடி நாட்டினர்.