சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓடிடி தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சியின் தொடக்கம் மற்றும் முடிவில் 30 அல்லது 20 வினாடிகளுக்கு புகையிலை எதிர்ப்பு காட்சிகளும் ஒளிபரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் புகையிலை நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனை கண்காணிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், இதனை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.