ஃபாக்ஸ்கான் ஆலை ஊழியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகம் - இருவர் கைது

ஃபாக்ஸ்கான் ஆலை ஊழியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகம் - இருவர் கைது
ஃபாக்ஸ்கான் ஆலை ஊழியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகம் - இருவர் கைது
Published on

ஃபாக்ஸ்கான் ஆலை ஊழியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகித்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒரகடம் அருகே வடகால் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அனுமதியின்றி அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து போராட்டம் நடத்தியது என தொழிற் சங்கங்களை சேர்ந்த 22 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஒரகடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளும் கூறியதால் பலரும் போராட்டத்தை கைவிட்ட நிலையில், ஒரு பகுதியைச் சார்ந்த நபர்கள் மட்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், ஃபாக்ஸ்கான் ஆலை ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கியதாகவும், அஜாக்ரதையாக செயல்பட்டதாகவும் சமையல் மேற்பார்வையாளர்கள் பிபின், கவியரசன் கைது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கும் விடுதி நடத்தி வரும் சதாசிவம் தலைமறைவான நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com