நாடாளுமன்ற தகவல் தொடர்புகளில் மாநில மொழிகளையும் ஆங்கிலத்தையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ஆங்கிலமும் இந்தியும் அலுவல் மொழியாக உள்ள இந்தியாவில் இந்தியில் மட்டும் கோப்பு கொடுக்கப்பட்டது ஏன்? இது ஆங்கிலத்தை அகற்றும் முயற்சியா ? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு பக்கம் மாநில மொழிகளுக்கு பாராட்டு; மற்றொரு பக்கம் இந்தி திணிப்பு என மத்திய அரசு செயல்படுகிறது என்றும், இதுகுறித்து தான் புகார் அளித்தாதகவும், அதற்கு நடவடிக்கை எடுப்பதாக துணைக்குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உறுதியளித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.