ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்தது என் மனைவிக்குக் கூட தெரியாது - தங்க தமிழ்ச்செல்வன்

ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்தது என் மனைவிக்குக் கூட தெரியாது - தங்க தமிழ்ச்செல்வன்
ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்தது என் மனைவிக்குக் கூட தெரியாது - தங்க தமிழ்ச்செல்வன்
Published on
தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2002-ஆம் ஆண்டு சிறை சென்று திரும்பிய பின்பு ஆண்டிபட்டி தொகுதியை விட்டுக்கொடுக்க தங்க தமிழ்ச்செல்வன் மறுத்து விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், ''2002 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற ஆட்சி அமைத்த பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்று திரும்பிய பின்பு ஆண்டிபட்டி தொகுதியை ராஜினாமா செய்யுமாறு என்னிடம் கூறினார்.
இது யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் நான் சொன்னபோது, ராஜினாமா செய்தால் போதும் என ஜெயலலிதா கூறினார். இந்த விஷயம் குறித்து எனது மனைவிக்கு கூட தெரியாத நிலையில் ஓபிஎஸ் பொய்யான புகாரை முன் வைக்கிறார். 66 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் புகார் இருந்த நிலையில், தனது மகனுக்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 500 கோடி ரூபாய் செலவு செய்த ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தை யார் தண்டிப்பது?
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தால் முதல் ஆளாக குடும்பத்துடன் சென்று சசிகலாவின் காலில் விழுவது ஓபிஎஸ் தான். இது கண்டிப்பாக நடக்கும. மக்களுக்கு நன்மைகள் செய்ய பதவியில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ் போடி தொகுதிக்கு செய்யாத பணிகளை 2 மாதத்தில் நான் செய்துள்ளேன்'' என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com