உலக அளவில் பணியாற்றும் தம்பதியரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் கணவரே அதிக ஊதியம் பெறுவதாகத் தெரியவந்துள்ளது. காரணம் என்ன பார்க்கலாம்.
ஏற்றதாழ்வுகளை களைய அரசும், சமூகமும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது உலக அளவில் நகர்புறத்தில் வசிக்கும் பெரும்பாலான குடும்பத்தில் அனைவருமே வேலைக்கு செல்கின்றனர். பொருளாதார ரீதியான தேவைகளை ஈடுசெய்ய இருவரும் பணியாற்றுவது அவசியமாகிறது. சர்வதேச அளவில் பணியாற்றும் தம்பதியர் வாங்கும் ஊதியம், அதற்கிடையே உள்ள வேறுபாடுகள், அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 45 நாடுகளின் பொது தரவுகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்த பின் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, பெண்கள் வேலைக்கு செல்வது குறைவாக காணப்படுவதும், அப்படியே வேலைக்குச் சென்றாலும் முழுநேரமாக வேலை பார்ப்பது கடினமான சூழலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் டென்மார்க், ஸ்வீடன், ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து போன்ற பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளிலும் கூட ஏற்றத்தாழ்வு இருப்பதை ஆய்வு முடிகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. சமீபத்திய தரவுகள் அடிப்படையில் பார்க்கும்போது எல்லா நாடுகளிலும், எல்லாப் பகுதிகளிலும் பெண்களைவிட ஆண்கள்தான் அதிக வருமானம் ஈட்டுவது தெரியவந்துள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வுக்கு பொதுவான காரணங்களாக ஆண்கள் பொருள் ஈட்டுபவர்கள் என்றும், பெண்கள் குடும்பத்தை கவனிப்பவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் பல பெண்கள் குழந்தை பிறந்தபிறகு வேலையை விட்டுவிடுகிறார்கள் அல்லது ஒரு இடைவெளியை எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு ஊதியமில்லாத வீட்டு வேலையும், குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் உள்ளதால், இதுபோன்ற ஊதியத்துடன் கூடிய வேலைகளுக்கு பெண்கள் செல்வது குறைவாக உள்ளது. இந்த பாலின ஏற்றத்தாழ்வு 1973 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் 20 விழுக்காடு வரை குறைந்திருப்பதுதான் ஆறுதல் அளிக்கும் காரணியாக பார்க்கப்படுகிறது. நவீன உலகில் இந்த ஏற்றதாழ்வுகளை களைய அரசும், சமூகமும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
இதுதொடர்பாக புதிய தலைமுறையின் 360 டிகிரி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்..