கமுதி அருகே சோள பயிரை மேய்ந்த 78 செம்மறி ஆடுகள் இறந்துள்ளன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவருக்கு சொந்தமான 78 செம்மறி ஆடுகள் சோள பயிரை மேய்ந்தபோது, ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர், செம்மறி ஆடுகளை வளர்ப்பதன் மூலம் தனது மனைவி 3 பெண் குழந்தைகளை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பயிரிட்டு அறுவடை செய்யப்பட்ட சோளப் பயிர்களை மேய்ந்த 130 செம்மறி ஆடுகள், தற்போது ஒவ்வொன்றாக உயிரிழந்துள்ளது. ரூ. 8 லட்சம் மதிப்பிலான 78 செம்மறி ஆடுகள் பரிதாபமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வரும் தனது குடும்பத்தை பாதுகாக்க அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பதி கோரிக்கை வைத்துள்ளார். ஆடுகளின் உயிரிழப்புக்கான காரணம், இன்னும் முழுமையாக தெரியவராமல் உள்ளது.