சேலம் மாவட்டம் ஆத்தூரில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி ஆலை பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
அப்போது, பேசிய அவர், ''ஜவ்வரிசி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழில் முதலீடுகள் கையெழுத்தாகியுள்ளன. ஜவ்வரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை பெற விவசாயிகள், உற்பத்தியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் 11 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது'' என்றார்.
முன்னதாக ஆத்தூரில் நவீன முறையில் செயல்படும் தனியார் ஜவ்வரிசி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.