தமிழகம்-கர்நாடகம் எல்லையில் அமைந்துள்ளது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி. இந்த நகராட்சி மக்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
1970-ஆம் ஆண்டு முதல்நிலை ஊராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சத்தியமங்கலம் நகரின் மத்தியில் பவானி ஆறு ஒடுகிறது. தினந்தோறும் நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுவதால் தண்ணீர் பிரச்னை இல்லாத நகரமாக சத்தியமங்கலம் நகராட்சி உள்ளது. சத்தியமங்கலம் நகராட்சியில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான எதிர்ப்பு மக்களிடையே இருக்கிறது.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சத்தியமங்கலம் வாரச்சந்தை திறந்தவெளியில் இருப்பதாகவும், சுகாதாரமின்றி தூர்நூற்றம் வீசுவதால் வாரச்சந்தைக்கு வரும் பெண்கள் சிரமத்தை சந்திப்பதாகவும் கூறுகிறார்கள்.
சத்தியமங்கலம் அண்ணாநகரில் 50 ஆண்டுகளாக வசிக்கும் 150 குடும்பங்களுக்கு இதுவரை பட்டா வழங்கபடவில்லை என்பதும் இவர்களின் குறை. சத்தியமங்கலம் பேருந்துநிலையத்தில் நவீன கழிவறை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது