தமிழ்நாட்டில் மின்வெட்டு என்பது எதிர்க்கட்சிகள் பரப்பும் விஷமப் பிரசாரம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர் கனமழையால் மின்வினியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பார்த்திவபுரத்தில் வெள்ளத்தால் சேதமடைந்ததால் மாற்றப்பட்ட புதிய மின்மாற்றியை அவர்கள் இயக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, குமரி மாவட்டத்தில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். இயற்கைச் சீற்றங்களைச் சந்திக்க தமிழ்நாடு மின்வாரியம் தயாராக உள்ளதாகவும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார்.