செங்கல்பட்டு: பயணச் சீட்டு கேட்டதால் நடத்துநரை தாக்கிய காவலர்

செங்கல்பட்டு: பயணச் சீட்டு கேட்டதால் நடத்துநரை தாக்கிய காவலர்
செங்கல்பட்டு: பயணச் சீட்டு கேட்டதால் நடத்துநரை தாக்கிய காவலர்
Published on

அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததால் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்ட நடத்துநரை, காவலர் தாக்கிய சம்பவம் செங்கல்பட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் நோக்கிச் செல்லும் தடம் எண் 508-ல் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறிய அரிதாஸ் என்ற காவலரிடம் பயணச்சீட்டு வாங்கும்படி நடத்துநர் முருகேசன் கேட்டுள்ளார். அதற்கு அரிதாஸ், தான் ஒரு காவலர் எனக் கூறவே, அடையாள அட்டையை காண்பிக்குமாறு நடத்துநர் கேட்டுள்ளார். அதற்கு காவலர் மறுப்பு தெரிவித்ததால், அவரை பேருந்தில் இருந்து கீழே இறங்கும்படி நடத்துநர் கூறியிருக்கிறார். இதனால் அவரை காவலர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முருகேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். சம்பவத்தை கேள்விப்பட்ட நடத்துநர்கள், ஓட்டுநர்கள் பேருந்துகளை ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே நிறுத்தியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பச்சரே, உரிய விசாரணை நடத்தி காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com