'அதிகார மாற்றத்துக்கான அடையாளம் செங்கோல்' - புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ''புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது வெறும் கட்டடம் அல்ல, இந்திய மக்களின் கனவுகளின் பிரதிபிம்பம். புதிய நாடாளுமன்றம் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும். இந்தியாவை உலக நாடுகள் நன்மைதிப்போடு இன்று பார்க்கின்றன. ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது.
900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது. அதிகார மாற்றத்துக்கான அடையாளம் செங்கோல். தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அமர்த காலத்திற்குள் இந்தியா நுழைந்துள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும். பழைய நாடாளுமன்றத்தில் போதுமான இடவசதி இல்லை. புதிய நாடாளுமன்றம் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றம் ஏழை, எளிய மக்களின் குரலாக ஒலிக்கும். பொற்காலத்திற்கு நுழைவதற்குள் பல தடைகளை தானடி வந்துள்ளோம். 9 ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது'' என்று பேசினார்.