நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'கொம்பேறி மூக்கன்' பாம்பு - அலறிய பயணிகள்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'கொம்பேறி மூக்கன்' பாம்பு - அலறிய பயணிகள்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'கொம்பேறி மூக்கன்' பாம்பு - அலறிய பயணிகள்
Published on

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு இருந்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்து போயினர்.

இரவு 7.50 மணிக்கு புறப்படும் அந்த ரயிலில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். எஸ் -1 கோச்சில் 44 ஆம் எண் இருக்கையின் கீழே பாம்பு ஒன்று நெளிந்ததைக் கண்ட பயணிகள், அச்சமுற்று அலறியபடியே ரயிலிலிருந்து வெளியேறினர். தகவலறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பாம்பை லாவகமாகப் பிடித்து கொண்டு சென்றனர்.

கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்த அந்தப் பாம்பு, புதர்கள் நிறைந்த சேத்துப்பட்டு யார்டில் நிறுத்தப் பட்டிருந்தபோது ரயிலில் நுழைந்திருக்கலாம் என அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com