No லைட்.. No ஃபேன்; வெறும் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கலைநயமிக்க மண்சார்ந்த வீட்டின் மகிமை!

இந்த வீட்டோட மாஸ்டர் பெட்ரூம். இந்த பெட்ரூமுக்கும் ஆத்தங்குடி டைலஸ்தான் போட்டிருக்காங்க. சீலங்க்கு பில்லர் ஸ்லாப் பயன்படுத்தி இருக்காங்க. இந்த பெட்ரூம்லேயும் ஃபே விண்டோ வச்சிருக்காங்க. இது நல்ல ஐடியா..
veedu
veedupt desk
Published on

இதுதான் முக்கியம். இந்த வாரம் மதுரை அழகர் கோவில் அருகில் உள்ள காத கிணறு என்ற ஊரில் 2000 சதுரடியில் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அழகான மண் வீட்டைப் பற்றிதான் பார்க்கப் போறோம்...

வீட்டின் உரிமையாளர்கள் சொன்னதென்ன?

”இந்த வீட்லேயே எங்களுக்கு புடுச்சது கிச்சன்தான். நல்ல காற்றோட்டமா இருப்பதால எங்களுக்கு ரொம்ப புடுச்சிருக்குது. அதேமாதிரி, வீட்ல ஃபேனே போடமாட்டோம். இயற்கையாவே எல்லா பக்கமும் காத்து வந்துக்கிட்டே இருக்கும்” என்றார் வீட்டு உரிமையாளர் கோமதி.

”வீட்டோட ஹால்ல நுழையும்போதும் பூஜை அறையிலும் பாரம்பரிய முறைப்பாடி நிலக்கல் வச்சிருக்கோம். அதே மாதிரி பெரிய பெரிய ஜன்னலா வச்சிருப்பதால் நல்ல காற்றோட்டமு; வெளிச்சமும் இருக்கு. தரைக்கு ஆத்தங்குடி டைல்ஸ் போட்டிருப்பதால் காலுக்கு நல்ல க்ரிப்பாவும் இருக்கு சில்னஸ் இல்லாமலும் இருக்கு” என்றார் வீட்டில் உரிமையாளர் நாராயணன். இவர்கள் சொல்வதுபோல் இருக்கிறதா வாங்க பார்க்கலாம்.

color glass
color glasspt desk

வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ள க்ளோஸ்டு சிட் அவுட்

இந்த வீட்டோட என்ட்ரன்ஸ்லேயே க்ளோஸ்டு சிட் அவுட் இருக்கு. பொதுவாக சிட் அவுட் கிரில் வைத்து பண்ணுவாங்க. அது ஓப்பன் சிட் அவுட்டாக இருக்கும். ஆனால், இது க்ளோஸ்டு சிட் அவுட். இதன் சுவற்றில கலர் கண்ணாடி பதித்திருக்காங்க. இந்த கலர் கண்ணாடி வெயிலிலும் நிலவு வெளிச்சத்திலும் ஜீரோ வாடஸ்; பல்பு எஃபெக்ட் கொடுக்குது. நிறையா கலர்ல கண்ணாடி இருப்பதால் வெயிலில் இருந்து உள்ளே வரும்போத ஒரு பிளெசண்ட் ஃபீல் இருக்கு.

கோவிலில் உள்ளது போன்ற நிலக்கல்

அடுத்ததா இந்த வீட்டோட நிலக்கல். இது கோவிலில் உள்ள நிலக்கல் போலவே இருக்கு. இதை கோவிலுக்கு வேலை பார்க்கும் அதே நபர்களை வைத்துதான் செய்திருக்கிறார்கள். அந்த நிலக்கல்லில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேக்குமரக் கதவு போட்டிருக்காங்க. இதையடுத்து உள்ளே சென்றால் நம்மை வரவேற்பது பெரிய விசாலமான ஹால். இந்த வீட்டுக்குள்ள நாம வந்ததும் நம்மை கவர்ந்திழுப்பது வீட்டின் தரைக்கு போட்டுள்ள ஆத்தங்குடி டைல்ஸ் தான். இந்த வீடு முழுவதுமே ஆத்தங்குடி டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க. அதை பார்க்கும் போது ஒரு புத்துணர்ச்சி வருது.

kitchen
kitchenpt desk

வீட்டை கட்டிய பொறியாளர் சொன்னதென்ன?

”இந்த சைட் இருப்பதிலேயே பள்ளமான பகுதியாக இருந்தது. அதனால நாங்க உடைகல்லை வைத்து 11 அடிக்கு பவுண்டேஷன் போட்டிருக்கோம். அதுதான் இதுல மேஜர் ஸ்பெஷாலிட்டி. இந்த 11 அடி பவுண்டேஷனுக்கு துளி சிமெண்ட் கூட நாங்க பயன்படுத்தல. இந்த பகுதியில் கிடைத்த சுக்கா மண்ணை வைத்தே கல்லை அடுக்கியிருக்கோம்.. வெத்தலைய அடுக்குவது போல் ஒவ்வொரு கல்லையும் அடுக்கி பவுண்டேஷன் போட்டிருக்கோம். அதுக்கு மேல இந்த வீட்டை நார்மலான ஸ்டெயில்லதான கட்டியிருக்கோம்” என்றார் பொறியாளர் இளஞ்சேரன்.

வீட்டைச் சுற்றி இடம்விட்டுள்ளதால் காற்றோட்டமாக இருக்கிறது!

படிக்கட்டுக்கு கீழே ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வச்சிருக்காங்க. ஒரு வீட்டோட டிசைன் என்பது எந்தெந்த இடத்துல தேவையோ அந்த இடத்தை பயன்படுத்தி இருக்காங்க. அதன் அருகே ஒரு காமன் ரெஸ்ட் ரூம், அப்புறமா ஒரு ஸ்டோர் ரூமும் வச்சிருக்காங்க. அதுக்கு பக்கத்துலேயே ஒரு வராண்டா இருக்கு. அந்த வராண்டால ஃபில்லர் ஸ்லாப்ல ஸ்லோப் ரூப் பண்ணியிருக்காங்க. இந்த வீட்டோட சுவருக்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடையில 10 அடி கேப் இருக்கு. இந்த வீட்டைச் சுற்றி இடம்விட்டு கட்டியிருப்பதால் காற்றும் வெளிச்சமும் தடைபடாமல் கிடைக்கும். ஒரு விட்டோட டிசைனை தாண்டி இது போன்ற சின்னச் சின்ன ஐடியாவையும் பயன்படுத்த வேண்டும்.

window
windowpt desk

பெரிய பெரிய ஃபே விண்டோஸ்!!

இந்த வீட்டோட ஓப்பன் கிச்சன் மற்றும் டைனிங் ஏரியா. டைனிங் ஏரியால ஃபே விண்டோ வச்சிருக்காங்க. இதனால நல்ல வெளிச்சமாவும் காற்றோட்டமாகவும் இருக்கு. அதுக்கடுத்து இந்த வீட்டோட சமையல் அறை. இங்க இரண்டு இன்ச் கடப்பா கல்லை பயன்படுத்தி ஸ்லாப் போட்டிருக்காங்க. எப்போது சமையல் அறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் ஒன்னு வைப்போம். ஆனால், இந்த வீட்ல ரெண்டு வச்சிருக்காங்க. அதனால் காற்றோட்டம் ரொம்பவே நல்லா இருக்கு. இந்த வீடு முழுவதுமே ஜன்னலாக இருப்பதால் வெளிச்சமும் காற்றோட்டமும் நல்லா இருக்கு.

அடுத்ததா இந்த வீட்டோட மாஸ்டர் பெட்ரூம். இந்த பெட்ரூமுக்கும் ஆத்தங்குடி டைலஸ்தான் போட்டிருக்காங்க. சீலங்க்கு பில்லர் ஸ்லாப் பயன்படுத்தி இருக்காங்க. இந்த பெட்ரூம்லேயும் ஃபே விண்டோ வச்சிருக்காங்க. இது நல்ல ஐடியா.. நீங்க வீடு கட்டிக்கிட்டு இருந்தால் ஃபே வீட்டோவை பயன்படுத்துங்க.

வித்தியாசமான பூஜை அறை!!

அடுத்து இந்த வீட்டோட பூஜை ரூம். இந்த பூஜை ரூமை பொறுத்தவரை இங்கேயும் கோவில் அமைப்பிலான நிலக்கல் வச்சிருக்காங்க. இந்த வீட்ல பவுண்டேஷனுக்கு மேல போட்டிருக்கிற பீம், அதேபோல் ஜன்னலுக்கு மேலே போட்டிருக்கிற லிண்டல் பீம், இது எல்லாமே மோல்டு வச்சி பண்ணுவாங்க. ஆனால், இந்த வீட்ல மோல்டுக்கு பதிலா செங்கல் பயன்படுத்தி இருக்காங்க. புதுசா ஒரு விசயத்தை பார்க்கும்போது மேலும் வித்தியாசமாக தெரியுது.

window
windowpt desk

தரைக்கு ஆத்தங்குடி டைல்ஸ் பயன்படுத்தி இருக்காங்க!!

அதேமாதிரி இந்த வீட்ல வச்சிருக்குற ஜன்னல் எல்லாமே பெரிய ஜன்னலாக இருக்கு. அந்த ஜன்னலை தாழ்வாகதான் வச்சிருக்காங்க. இதனால நல்ல வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் நேரடியாகவே வரும். அடுத்து மாடிக்கு போற படிக்கட்டுக்கு டைல்ஸ் பயன்படுத்தல அதற்கு பதிலா கான்கிரீட்க்கு மேலே பெயிண்ட் அடுச்சிருக்காங்க. படியோட சைடுல ஆத்தங்குடி டைல்ஸ் ஒட்டியிருக்காங்க. இது பாக்குறதுக்கு ரொம்பவே அழகா இருக்கு.

படிக்கட்டு மாதிரி செய்யப்பட்டுள்ள ஜாலி ஒர்க்!!

இந்த வீட்ல சின்னதா ஒரு ஸ்டெடி ஏரியா வச்சிருக்காங்க. அதன் சுவற்றில் படிக்கட்டு போல ஜாலி ஒர்க் பண்ணியிருக்காங்க. இதன் வழியா நல்ல காற்றோட்டமா இருக்கு. வீட்டோட முதல் தளத்துல இரண்டு பெட்ரூம் இருக்கு. இந்த வீட்டோட எல்லா கதவுகளும் மறு பயன்பாடு செய்யப்பட்டதுதான்.

sealing
sealingpt desk

இரண்டடுக்கு சுவர் பூச்சு!!

இந்த வீட்டோட சுவர் பற்றி சொல்லியே ஆகணும். இந்த வீட்டோட சுவரை எழுப்ப நாட்டு செங்கலை பயன்படுத்தி இருக்காங்க. செல்கலுக்கு மேலே மண்ணும் சுண்ணாம்பும் சேர்ந்த கவவையை பயன்படுத்தி இருக்காங்க. அதேமாதிரி சுவரின் வெளிப்புற பூச்சுக்கு இரண்டு அடுக்கு பண்ணியிருக்காங்க. முதல் அடுக்குல செம்மண், சுண்ணாம்பு, கடுக்காய் வெல்லம் தண்ணி இதையெல்லாம் மிக்ஸ் பண்ணி ரஃப்பான ஃப்னிசிங் பண்ணியிருக்காங்க. அதுக்கு மேலே இதே கலவைதான். ஆனால், செம்மண்ணை நன்றாக சளித்து ஸ்மூத் பின்ஸ் பண்ணியிருக்காங்க.

டபுள் லேயர் சீலிங் ஃபில்லர்

இந்த வீட்ல பயன்படுத்தியிருக்க பொருட்கள் எல்லாமே கலைநயம் மிக்க பழமையான பொருட்கள்தான். ஆனால், இந்த வீட்டோட ஆர்கிஸ்டெச்சர் டிசைன் அர்பன் ஸ்டெயில்ல இருக்கு. இரண்டும் கலந்து செய்த கலவையாகதான் இந்த வீடு இருக்கு. இந்த வீடு முழுவதுமே சீலிங்கிற்கு டபுள் லேயர் ஃபில்லர் ஸ்லாப்தான் பயன்படுத்தி இருக்காங்க. இதன் பலன் வீட்டில் இருந்து வெளியே போய்விட்டு உள்ளே வந்தாலே தெரிந்துவிடும்.

wall
wallpt desk

இந்த வீட்ல ஸ்லோப் ப்ரூப் பண்ணியிருக்காங்க. இதனால் காற்றடிக்காமல் மழை பெய்தால் சுவர் நனையாது. ஆனால், காற்றோடு மழை பெய்தால் மட்டுமே இந்த வீடு நனையும். இந்த வீடு கண்டிப்பா உங்களுக்கு பிடிச்சிருக்கும். இதுபோன்ற வித்தியாசமான வீடுகளின் சிறப்புகளைப் பற்றி அடுத்து வரும் தொகுப்பில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com