சென்னை திருவள்ளூர், திருவனந்தபுரம் உட்பட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் நடத்திய சோதனையில் சிம் கார்டுகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் விழிஞம் கடற்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் படகில் சென்றபோது, அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமையினர் மே மாதம் வழக்கு பதிவு செய்து 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சென்னை திருவள்ளூர், திருவனந்தபுரம் ஆகிய 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தினர். இதில் விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்களுடன் மொபைல் போன் சிம் கார்டுகள் உள்ளிட்ட 7 டிஜிட்டல் ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.