விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் மீட்கப்பட்ட சிறுவன் சடலம் - சிக்கிய புதிய சிசிடிவி ஆதாரம்

விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் மீட்கப்பட்ட சிறுவன் சடலம் - சிக்கிய புதிய சிசிடிவி ஆதாரம்
விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் மீட்கப்பட்ட சிறுவன் சடலம் - சிக்கிய புதிய சிசிடிவி ஆதாரம்
Published on

விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் இருந்து 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், புதிதாக சிசிடிவி காட்சி ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதைவைத்து, தள்ளு வண்டியில் சிறுவனை கிடத்திச் சென்ற இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் இஸ்திரி செய்யும் தள்ளுவண்டியில் ஐந்து வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். முதற்கட்ட விசாரணையில் பட்டினியால் சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், சிறுவனை இருவர் தூக்கி வருவதும், பின்னர் தள்ளுவண்டியில் கிடத்திவிட்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சிறுவன் கொல்லப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், புதிதாக சிசிடிவி காட்சி ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

அதில், தள்ளுவண்டியில் சிறுவனை கிடத்திவிட்டு, இருவரும் பேருந்தில் ஏறிச்சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து கடலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அடையாளம் தெரியாத அந்த இருவரையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com