ஒரு சிறுவனை பட்டாம்பூச்சி பிடிக்க அழைத்துச்சென்று, அதன் வழியாக அவனுக்கு மகிழ்ச்சிக்கான திறவுகோலை கற்றுக்கொடுக்கிறார் அவனது ஆசிரியர். அந்த நிகழ்வு, நமக்கும் கூட நம்முடைய இந்நாளை நன்னாளாக மாற்றும் வல்லமை கொண்டது. இதோ அந்நிகழ்வு, ஒரு குட்டி ஸ்டோரியாக இங்கே உங்களுக்கு!
மாணவனொருவன் தன்னுடைய ஆசிரியரிடம் போய், `எனக்கு மகிழ்ச்சியே கிடைக்கவில்லை சார். எவ்வளவோ முயற்சித்துவிட்டேன். ஆனால் முடியவில்லை. நான் என்ன செய்ய?’ என்று கேட்கிறான். இதைக்கேட்ட அந்த ஆசிரியர், அந்த மாணவனை சில நிமிடங்கள் கவனித்துவிட்டு `இங்குள்ள தோட்டத்திற்கு சென்று, ஒரு பட்டாம்பூச்சியை பிடித்துக்காட்டு. மகிழ்ச்சியை கண்டறியும் வழியை நான் சொல்கிறேன்’ என்கிறார்.
எதுவும் புரியாத அம்மாணவன், அங்கிருந்து வேகமாக தோட்டத்துக்கு சென்று பட்டாம்பூச்சியை பிடிக்க முயல்கிறான். வெகுநேரமாக முயன்றும் அவனால் ஒரு பட்டாம்பூச்சியை கூட பிடிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சோர்வடைந்த அம்மாணவன், ஆசிரியரிடம் சென்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறான்.
அதைக்கேட்ட அந்த ஆசிரியர், `சரி வா. இப்போது நான் வருகிறேன்’ என்று கூறி சிறுவனை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற பின், `கொஞ்ச நேரம் இந்த தோட்டத்தை ரசிக்கலாம் நாம்’ என்றுகூறி அங்கு அமர்ந்து ஒவ்வொரு செடி பற்றியும், அதன் பூ - காய் கனி பற்றியும் பேசிக்கொண்டு சிலாகித்து வந்திருக்கிறார்.
சில நிமிடங்கள் இப்படியே கடந்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், ஒரு பட்டாம்பூச்சி அம்மாணவன் மீது வந்து அமர்கிறது. அவனுக்கோ ஆச்சர்யம்... `அட எவ்வளவு நேரமாக உன்னை நான் துரத்திக்கொண்டு வந்தேன்.! இப்போது நான் முயலவே இல்லையே உன்னை பிடிக்க’ என்று நினைத்தான்.
அப்போது அந்த ஆசிரியர் சொன்னார்... “இந்த தோட்டம் போலத்தான் வாழ்க்கையும். அதில் பட்டாம்பூச்சியை போலத்தான் மகிழ்ச்சி. நீ அதை பிடிக்க வேண்டும் என்று முயற்சித்துக்கொண்டே இருந்தால், அது உன்னை விட்டு தூர தூர பறக்கும். சற்று அமர்ந்து, ஆசுவாசமாக உன் வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள். மகிழ்ச்சி தன்னால் உன்னை வந்து சேரும்” என்று கூறியிருக்கிறார்.
அப்போதுதான் மாணவனுக்கு `நம்மால் மகிழ்ச்சியை எங்கேயோ சென்று துரத்தி பிடிக்க முடியாது' என்று புரிந்தது. வாழ்க்கையை ரசித்து பார்க்கையில், மகிழ்ச்சி தன்னால் வரும் என்றும் புரிந்தது! நமக்கும் அதேதான்! மகிழ்ச்சியை துரத்தாமல், இப்போது இந்த நொடியை ரசித்தால், எல்லாம் நம் வசமே