தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மெய்யநாதனைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு அமைச்சர் சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெய்யநாதன், கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த புதிய மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.