மழை நின்றுள்ளதால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழை நின்றுள்ளதால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் மற்றும் தமிழக அரசின் குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.