ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என நோபல் பரிசு வென்றவரும், செயற்பாட்டாளருமான மலாலா கூறியுள்ளார்.
ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மலாலா, ஆஃப்கான் பெண்கள் தங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் உள்ள உரிமைகள் குறித்து முன்னின்று குரல் எழுப்ப வேண்டும் என கூறினார். ஆஃப்கான் பெண்களின் சுயமரியாதை, அவர்களது உரிமைகளுக்கான பாதுகாப்பு போன்றவற்றில் சிறிதளவும் சமரசம் செய்து கொள்ள முடியாது எனக் கூறிய மலாலா, ஐக்கிய நாடுகள் சபை அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.