மருத்துவப்படிப்பில் 7.5 % இடஒதுக்கீட்டை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன புதிய யோசனை!

மருத்துவப்படிப்பில் 7.5 % இடஒதுக்கீட்டை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன புதிய யோசனை!
மருத்துவப்படிப்பில் 7.5 % இடஒதுக்கீட்டை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன புதிய யோசனை!
Published on

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறு ஆய்வு செய்யலாம் என் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த யோசனையை தெரிவித்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று நீதிபதி கூறியுள்ளார்.

அவர்களின் பொருளாதார சமூக நிலை என்பது அரசுப்பள்ளி மாணவர்களை போலதான் உள்ளது என்றும் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு மறு ஆய்வு செய்யலாம் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com