கொங்குநாடு மாநிலம் என்பது விஷமத்தனம்; சென்னை முதல் குமரி வரை ஒரே சிந்தனை: கே.பி.முனுசாமி

கொங்குநாடு மாநிலம் என்பது விஷமத்தனம்; சென்னை முதல் குமரி வரை ஒரே சிந்தனை: கே.பி.முனுசாமி
கொங்குநாடு மாநிலம் என்பது விஷமத்தனம்; சென்னை முதல் குமரி வரை ஒரே சிந்தனை: கே.பி.முனுசாமி
Published on

கொங்குநாடு தனி மாநிலம் என்ற விஷமத்தனமான சிந்தனை நாட்டுக்கு நல்லதல்ல என்றும் இது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மிகப்பெரிய தொலைநோக்குப்பார்வை கொண்ட பேரரறிஞர் அண்ணாவே நாட்டின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் திராவிட நாடு என்ற கோரிக்கையை கைவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், "கொங்குநாடு தனி மாநிலம் என்பது விஷமத்தனமான சிந்தனை. யாரையோ சிறுமைப்படுத்த முன்வைக்கப்பட்ட விஷமத்தனமான சிந்தனை நாட்டுக்கு நல்லதல்ல.

கொங்குநாடு தனி மாநிலம் என யார் முன்னிறுத்தினரோ அவர்களே அவ்வார்த்தை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நாடு வளமாக இருப்பதே முக்கியம். சிறுசிறு மாநிலங்களாக பிரிந்தால் நாட்டின் பலம் குறையும். சென்னை முதல் குமரி வரை உள்ள மக்கள் இது தமிழ்நாடு என்ற ஒரே சிந்தனையோடு உள்ளனர், மக்கள் மனதில் தேவையற்ற விதைகளை விதைப்பதை தவிர்க்க வேண்டும்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com