இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் ஊராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள அந்த பகுதிக்குச் சென்ற தாய் யானையும் அதன் குட்டியும் கிடங்கில் இருந்த நெகிழி கழிவுகளை உண்ணும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனைக் கண்ட வனவிலங்குகள் நல ஆர்வலர்கள், தங்களின் அதிர்ச்சியை பதிவு செய்து வருகின்றனர். யானைகள் நெகிழி கழிவுகளை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே குப்பைக் கிடங்கில் இருந்து யானையை பத்திரமாக மீட்டு வனத்திற்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.