காரைக்குடி: 5 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக களரி கற்றுக் கொடுக்கும் பயற்சியாளர்

காரைக்குடி: 5 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக களரி கற்றுக் கொடுக்கும் பயற்சியாளர்
காரைக்குடி: 5 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக களரி கற்றுக் கொடுக்கும் பயற்சியாளர்
Published on

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்யமாக வாழ யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் இன்றைய சூழலில், தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரியை இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார் காரைக்குடியை சேர்ந்த பயிற்சியாளர் ராஜகம்பீரன்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் களரி பயிற்சியாளர் ராஜகம்பீரன். இவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரியை மாணவ, மாணவியர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். களரி பயிற்சியின் போது உடலில் உள்ள இருபத்தி இரண்டாயிரம் நாடி, நரம்புகள் அத்தனையும் ஒரே நேரத்தில் இயங்கும் என்று கூறுகிறார் இவர்.

களரி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஒழுக்கத்தை வளர்ப்பது, சுறுசுறுப்புடன் இருக்க வைப்பது, நேரம் தவறாமை போன்ற பல நல்ல விஷயங்களையும் கற்றுத்தருகிறது. எதிரிகளை வீழ்த்தக் கூடிய பயிற்சி மட்டுமில்லாமல், முழுக்க, முழுக்க மருத்துவம் சார்ந்த பயிற்சியாகவும் இருந்து வருகிறது களரி.

சிறுவர் முதல் பெரியவர் வரை களரி தற்காப்புக் கலையை பயின்று நோய் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்கிறார் பயிற்சியாளர் ராஜகம்பீரன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com