'தூக்கத்திலும் வழக்குகளை பற்றித்தான் யோசிப்பேன்' - நீதிபதி கிருபாகரன் பேச்சு

'தூக்கத்திலும் வழக்குகளை பற்றித்தான் யோசிப்பேன்' - நீதிபதி கிருபாகரன் பேச்சு
'தூக்கத்திலும் வழக்குகளை பற்றித்தான் யோசிப்பேன்' - நீதிபதி கிருபாகரன் பேச்சு
Published on

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவருக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்றனர். 1959 ஆகஸ்ட் 21ல் திருவண்ணாமலை மாவட்டம் நெடும்பிறை கிராமத்தில் பிறந்தவர் கிருபாகரன். சட்டப்படிப்பை முடித்து 1985ல் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். கடந்த 2009 மார்ச் 31ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.2011 மார்ச் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றத் தொடங்கியவர் நாளை முதல் பணி ஓய்வு பெறுகிறார்.

விழாவில் பேசிய அவர், ''நான் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்ததே இல்லை. தூக்கத்திலும் வழக்கை நடத்தி, உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருப்பேன் என மனைவி கூறுவார். என்னுடைய வளர்ச்சி மற்றும் இக்கட்டான சமயங்களில் முக்கிய உந்துதலாக இருந்தவர்கள் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி எம்.சத்யநாராயணன். வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றத்தின் மேன்மை காக்கப்படவில்லை என்றால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com