மணல் கடத்தல் விவகாரத்தில் போலீசாருக்கு மிரட்டல்: திமுக நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை

மணல் கடத்தல் விவகாரத்தில் போலீசாருக்கு மிரட்டல்: திமுக நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை
மணல் கடத்தல் விவகாரத்தில் போலீசாருக்கு மிரட்டல்: திமுக நிர்வாகியை பிடிக்க 3 தனிப்படை
Published on

மணல் கடத்தல் விவகாரத்தில் காவல்துறையினரை மிரட்டிய திமுக நிர்வாகி தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டி ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவை திமுகவின் மணப்பாறை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமிக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆரோக்கியசாமி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, பறிமுதல் செய்த வாகனங்களையும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்ததால், ஆரோக்கியசாமியின் வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு வாகனங்கள் மட்டும் ஒப்படைக்கப்பட்டன. இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல் ஆய்வாளர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர் ஏற்கனவே காவல்துறையினரிடம் பிடிபட்ட நிலையில், மேலும் இருவரைக் கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆரோக்கியசாமி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள சூழலில், அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com