இந்தோனேஷியாவில் உள்ள மெராபி எரிமலை சீறி வருகிறது. செக்கச்செவேல் என தீக்குழம்பை கக்கி வருகிறது.
ஓன்றரை கிலோமீட்டர் நீளத்திற்கு எரிமலைக் குழம்பு பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிமலை சாம்பல் அருகில் உள்ள பகுதிகளை போர்வைபோல் போர்த்தியுள்ளது. எரிமலையை சுற்றி 7 கிமீ வரை வரவேண்டாம் என பொதுமக்களை அரசு அறிவுறுத்தி உள்ளது.
சுமார் 3 கிமீ உயரமுள்ள மெராபி எரிமலை இந்தோனேஷியாவில் உயிர்ப்புடன் உள்ள எரிமலைகளில் ஒன்றாக உள்ளது. மெராபி எரிமலை கடந்த 2010 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் சீறிய நிலையில், 350 பேர் அதில் சிக்கி உயிரிழந்தனர்.