வாகனத்தில் கரும்பு இல்லாத ஆத்திரத்தில் காவலர், ஓட்டுநரை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை

வாகனத்தில் கரும்பு இல்லாத ஆத்திரத்தில் காவலர், ஓட்டுநரை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை
வாகனத்தில் கரும்பு இல்லாத ஆத்திரத்தில் காவலர், ஓட்டுநரை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வாகனத்தை வழிமறித்து கரும்பு உள்ளதா? என சோதனை செய்த யானை, கரும்பு கிடைக்காததால் ஓட்டுநரை விரட்டிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவிலிருந்து திம்பம், பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கரும்பு ஏற்றிவரும் வாகனங்களை எதிர்பார்த்து காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளன. பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வாழைக்காய் ஏற்றிச்சென்ற டெம்போவை காட்டு யானை வழிமறிக்க, ஓட்டுநர் சாலையோரம் நின்று கொண்டார்.

அந்த யானை டெம்போவை சுற்றிவந்து கரும்பு உள்ளதா என சோதனையிட்டதோடு, கரும்பு இல்லாததால் அந்த வாகனத்தை கவிழ்க்க முயன்றது. அப்போது அருகில் நின்றிருந்த சோதனைச் சாவடி காவலர்கள் மற்றும் டெம்டோ ஓட்டுநரை ஆக்ரோஷத்துடன் சிறிது தூரத்திற்கு யானை துரத்திச் சென்றது. இந்த பரபரப்பான சூழலில் ஆக்ரோஷத்துடன் இருந்த யானையை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரு கார் வேகமாக கடந்து சென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com