மும்பையில் கனமழை: வீடுகள் இடிந்து விழுந்து 24 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

மும்பையில் கனமழை: வீடுகள் இடிந்து விழுந்து 24 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
மும்பையில் கனமழை: வீடுகள் இடிந்து விழுந்து 24 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
Published on

மும்பை மாநகரத்தில் குறைவான நேரத்தில் பெய்த பெருமழையால் இரு வேறு இடங்களில் வீடுகள் இடிந்து 24 பேர் இறந்தனர். மும்பை மாநகரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆறே மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. செம்பூர் பகுதியில் வீடு ஒன்று நள்ளிரவில் இடிந்ததில் 17 பேர் இறந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பை மாநகரின் ஒரு பகுதியான விக்ரோலியில் நள்ளிரவில் குடிசை வீடுகள் இடிந்ததில் உள்ளே இருந்த 7 பேர் உடல் நசுங்கி இறந்தனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் இரங்கல் தெரிவித்துடன் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார். மும்பையில் பெய்த பெருமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது. பெரும்பாலான தண்டவாளங்கள் மூழ்கியதால் புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. நீரேற்று நிலையங்கள் மூழ்கி மோட்டார்கள் பழுதடைந்ததால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com