புதுக்கோட்டை: சொந்த செலவில் கோயில் கட்டி பராமரித்து வரும் மூதாட்டி...

புதுக்கோட்டை: சொந்த செலவில் கோயில் கட்டி பராமரித்து வரும் மூதாட்டி...
புதுக்கோட்டை: சொந்த செலவில் கோயில் கட்டி பராமரித்து வரும் மூதாட்டி...
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவரும் மகனும் உயிரிழந்துவிட மன ஆறுதலுக்காக கோயில் ஒன்றை கட்டி பாராமரித்து வருகிறார் மூதாட்டி ஒருவர். நிம்மதி தரும் அந்த கோவிலையும் சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும் கோயிலை இந்து சமய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் காத்திருக்கிறார் அந்த மூதாட்டி.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதான சாலையில் ஆர்எம்வி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அந்த சிறிய கோயில் உள்ளது. மனோகர ஜெயவீர ஆஞ்சநேயரும், விநாயகரும், துர்கை அம்மனும், தட்ஷினா மூர்த்தியும் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். கோயிலை சுத்தம் செய்து கோலமிடுதலில் தொடங்கி பூஜை செய்வது வரை சிந்தாமணி என்ற 62 வயதான மூதாட்டியே கவனித்து வருகிறார்.

சிந்தாமணி பாட்டிதான் இந்த கோயிலையே கட்டியவர். இவரது கணவர் ராமையா 30 ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் குன்றி உயிரிழந்துவிட்டார். ஆசை ஆசையாய் வளர்த்த மகன் மனோகரனும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார். அடுத்தடுத்து இழப்புகள் சிந்தாமணி பாட்டியை இடியாக தாக்கியது.

சோகத்தில் இருந்து மீள 2004ஆம் ஆண்டு வீட்டின் அருகே சொந்த செலவில் ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார் அவர். கோயில் கட்டுவதற்காக தான் வசித்துவந்த பெரிய வீட்டை விற்றுவிட்டு தற்போது மிகச்சிறிய வீட்டில் வசிக்கிறார் சிந்தாமணி பாட்டி. தமிழ்நாடு அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகைதான் சிந்தாமணி பாட்டியின் ஒரே வருவாய். அந்த சிறிய தொகையை கொண்டுதான் கோயிலை பாராமரித்து வருகிறார்.

வறுமையிலும் முதுமையிலும் தவறாமல் தான் பராமரித்து வரும் கோயிலை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாக கூறுகிறார் சிந்தாமணி. எனவே கோயிலை இந்து சமய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் காத்திருக்கிறார் அந்த மூதாட்டி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com