தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார். அப்போது சென்னை திரும்பிய முதல்வர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடுகள் செய்துள்ளது என்பது குறித்து விளக்கமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், உதகையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் கூட்டத்தில் முதலீடுகள் குறித்து ஆளுநர் ஆர்என்.ரவி பேசியுள்ளார். ஆளுநர் பேசும் போது, “நாம் கேட்பதாலோ அல்லது வெளிநாடு சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வந்துவிடாது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த குழுவை உருவாக்க வேண்டும்” என பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றுவந்தது குறித்து ஆளுநர் மறைமுக விமர்சனம் செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆளுநரின் இந்த பேச்சு இப்போது பேசு பொருளாகியுள்ளது.