கூட்டு குடிநீர்திட்ட குழாயில் உடைப்பு: மரத்திலிருந்து தண்ணீர்பீறிட்ட சம்பவத்தில் திருப்பம்

கூட்டு குடிநீர்திட்ட குழாயில் உடைப்பு: மரத்திலிருந்து தண்ணீர்பீறிட்ட சம்பவத்தில் திருப்பம்
கூட்டு குடிநீர்திட்ட குழாயில் உடைப்பு: மரத்திலிருந்து தண்ணீர்பீறிட்ட சம்பவத்தில் திருப்பம்
Published on

மதுரை பழங்காநத்தம் பகுதியில் வாகை மரத்திலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

மதுரை பழங்காநத்தம் வேல்முருகன் நகர் பகுதி சாலை ஓரத்தில் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகை மரம் உள்ளது. அந்த மரத்திலிருந்து திடீரென்று ஊற்று போல் தண்ணீர் பீறிட்டுவரத் தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்து சென்றதுடன் சிலர் பாத்திரங்களில் மரத்திலிருந்து வடியும் தண்ணீரை பிடித்து சென்றனர்.

மரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றியது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்று ஆய்வு நடத்திய போது வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று தெரியவந்தது.

இந்த உடைப்பால் வெளியேறிய தண்ணீர், மரத்தில் உள்ள துவாரம் மூலமாக பீய்ச்சி அடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com