நெருங்கும் பொங்கல் பண்டிகை - ஜல்லிக்கட்டு காளைகளை தாக்கும் கோமாரி நோய்

நெருங்கும் பொங்கல் பண்டிகை - ஜல்லிக்கட்டு காளைகளை தாக்கும் கோமாரி நோய்

நெருங்கும் பொங்கல் பண்டிகை - ஜல்லிக்கட்டு காளைகளை தாக்கும் கோமாரி நோய்
Published on

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது காளை வளர்ப்போரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

ஜல்லிக்கட்டில் களம் காண காளைகளை தயார்படுத்தி காத்திருந்தோரை கலங்க வைத்திருக்கிறது கோமாரி நோய். நாமக்கல் அருகே உள்ள அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், வேலம்பட்டி, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் நோய் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காளைகள் குணமடைந்து வந்தாலும் பழைய நிலையை எட்டுவது கடினம் என்றும் இன்னும் ஓராண்டுக்கு அதனை தயார் படுத்த வேண்டும் என்கின்றனர் காளை வளர்ப்போர்.

கோமாரி நோய் வேகமாக பரவக்கூடிய வைரஸ் நோய் என்றும், இதில் கன்றுகளும், இளம் வயது கால்நடைகளும் அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் திட்டமிட்டு தடுப்பூசி போடும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்கின்றர் கால்நடை மருத்துவர்கள். கோமாரி நோய் கறவை மாடுகளை தாக்கியதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு காளை மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற் முடியாத நிலையில் இருப்பது மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இனி வரும் ஆண்டுகளில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com