தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்.. விடுமுறைநாளில் மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்.. விடுமுறைநாளில் மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்.. விடுமுறைநாளில் மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்
Published on

விடுமுறை தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சமாதி வரை அமைந்துள்ள நடைபாதையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொதுமக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கடற்கரைக்கு வந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஏற்கெனவே கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், இங்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிந்து வருகின்றனர்.

காவல் துறையினர் பாதுகாப்பு பணியோடு கூட்டம் கூடுவதை தடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி சமாதி வளாகத்திற்கு முன்பு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள முக்கிய கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com