வீடியோ ஸ்டோரி
க.அன்பழகன் நூற்றாண்டு பிறந்த நாள்: சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
க.அன்பழகன் நூற்றாண்டு பிறந்த நாள்: சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தபடி, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டடத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். அவரது மார்பளவு சிலையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். பல்வேறு காலகட்டங்களில் நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் க.அன்பழகன். 1977ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை திமுக பொதுச் செயலாளராக இருந்தவர் அவர்.
இதையும் படிக்க: சென்னை: பேருந்து நடத்துனரை தாக்கிய பள்ளி மாணவர்கள் இருவர் கைது