கெட்டுப்போன கிரில் சிக்கன்? - ஓட்டல் ஓனர் மகன் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சிகள்

கெட்டுப்போன கிரில் சிக்கன்? - ஓட்டல் ஓனர் மகன் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சிகள்
கெட்டுப்போன கிரில் சிக்கன்? - ஓட்டல் ஓனர் மகன் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சிகள்
Published on
சென்னையில் கிரில் சிக்கன் சரியில்லை எனக் கூறி ஓட்டல் உரிமையாளர் மகனின் மீது ஒரு கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தி.நகர் ராமேஷ்வரம் சாலையில் இயங்கி வரும் பிரியாணி கடைக்கு கடந்த 8 ஆம் தேதி வந்த நபர் கிரில் சிக்கன் வாங்கிச் சென்றதாக தெரிகிறது. ஒரு மணி நேரம் கழித்து வந்த நபர் கெட்டுப்போன சிக்கனை கொடுத்ததாகக் கூறி கடை உரிமையாளரின் மகன் முகமது அர்ஷத் உடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து 10 க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சேர்ந்து வந்த நபர் அர்ஷத்தை கடுமையாக தாக்கினார்.
காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து பிரச்னைக்கு காரணமான ஜெகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரச்னை தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com