கண்ணன் என் தோழன் - கண்ணனையும், பாரதியையும் பிரித்து பார்க்க முடியுமா?

கண்ணன் என் தோழன் - கண்ணனையும், பாரதியையும் பிரித்து பார்க்க முடியுமா?
கண்ணன் என் தோழன் - கண்ணனையும், பாரதியையும் பிரித்து பார்க்க முடியுமா?
Published on

கண்ணனையும் வண்ணக் கவிபாடிய பாரதியையும் பிரித்துப் பார்க்க முடியுமா? கண்ணன் என் தோழன், கண்ணன் என் தாய், தந்தை, பிள்ளை, சேவகன், அரசன், சீடன், குரு, ஆண்டான், என அத்தனை விதங்களிலும் கண்ணனைப் பாடியவர் பாரதியார். பாரதி நினைவு நூற்றாண்டில் அந்தப் பாடல்களில் சிறுபகுதி இதோ…

கண்ணன் என் தோழன்

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்

குலுங்கிடச் செய்திடு வான்; - மன

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி

தழைத்திடச் செய்திடு வான்; - பெரும்

ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று

அதனை விலக்கிவிடு வான்; - சுடர்த்

தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்

தீமைகள் கொன்றிடு வான்.

உண்மை தவறி நடப்பவர் தம்மை

உதைத்து நசுக்கிடுவான்; - அருள்

வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்

மலைமலை யாவுரைப் பான்; - நல்ல

பெண்மைக் குணமுடையான்; - சில நேரத்தில்

பித்தர் குணமுடை யான்; - மிகத்

தண்மைக் குணமுடை யான்; - சில நேரம்

தழலின் குணமுடை யான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com