2021 - 22ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் ஆணையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகாமையிலுள்ள பகுதிகளிலிருந்து பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவ - மாணவியர் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி பயில சிரமப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, 2021- 22 கல்வியாண்டில் கூடுதலாக தேவையுள்ள கலைப்பாடப் பிரிவுகளுக்கு 25 சதவிகிதம் கூடுதலாகவும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 25 விழுக்காடு கூடுதலாகவும் மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கப்படுவதாக அரசின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.