சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி அளிக்கக்கோரி, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த விசைபடகு மீனவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடை கோரிக்கை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்....
"சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால், கடல்வளமோ அல்லது மீன்களின் குறைபாடோ ஏற்படுவதில்லை. ஆனால், நல்லமுறையில் மீன் ஆதாரம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்தால் மட்டுமே நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அதேபோல எங்கள் குடும்பத்தில் நடைபெறும் நல்லது கெட்டதிற்கு தேவையானதை செய்ய முடியும்.
நாங்கள் காலம் காலமாக சுருக்குமடி வலையை பயன்படுத்தி தொழில் செய்து வருகிறோம். ஆனால், புதிதாக பிரச்னையை உருவாக்குகிறார்கள். அரசாங்கம் எங்களோடு உட்கார்ந்து பேசினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்வோம். அரசு எங்களை அழைத்து பேசினால் நாங்கள் பேச தயாராக இருக்கிறோம். எங்கள் கருத்தை கேட்டு முடிவெடுத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.
அதனால்தான் நாங்க கடந்த இரண்டாண்டு காலமாக போராடிக்கொண்டே இருக்கின்றோம். என்றைக்காவது எங்களை அழைத்து பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். தயவு செய்து ஆட்சியாளர்கள் முயற்சி எடுத்து விரைவாக தீர்வுகாண வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறோம்" என மீனவர்கள் தெரிவித்தனர்.