பெட்ரோல் விலை சதத்தை கடந்து அதிர வைத்துக் கொண்டிருக்கும் சூழலில், சூரிய சக்தியில் இயங்கும் சைக்கிளை கண்டுபிடித்து கவனம் ஈர்த்துள்ளார், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவரான தனுஷ்குமார், சூரிய சக்தியில் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார். 12 வோல்ட் அளவுள்ள இரண்டு சூரியசக்தி மின்கலங்களை மிதிவண்டியில் பொருத்தி இரண்டு பேட்டரிகள் மற்றும் டி.சி.மோட்டார் பொருத்தி இயங்கும் வகையில் இந்த சோலார் மிதிவண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரியசக்தி மிதிவண்டியை உருவாக்க 25,000 ரூபாய் வரை செலவாகும் எனவும் ஒரு முறை செலவு செய்தால் மீண்டும் செலவுகள் ஏற்படாது எனவும் மாணவர் தனுஷ் குமார் கூறுகிறார்.
தற்பொழுது 3 சைக்கிள்களை உருவாக்கியுள்ள நிலையில், கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் சோலார் சைக்கிள்களை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாக மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.